பாலப்பட்டு கோவிலில் முத்துப்பல்லக்கு விழா
செஞ்சி: பாலப்பட்டு திரவுபதியம்மன் கோவிலில் முத்துப்பல்லக்கு ஊர்வலம் நடந்தது. செஞ்சி தாலுகா, பாலப்பட்டு திரவுபதியம்மன் கோவிலில் 8 நாட்கள் நடைபெறும் தீமிதி விழா கடந்த 10ம் தேதி துவங்கியது. அன்று கிராம தேவதைக்கு ஊரணி பொங்கல் வைத்து வழிபட்டனர். இரவு பூங்கரகம் வீதி உலா நடந்தது. தொடர்ந்து 11ம் தேதி காலைகொடியேற்றமும், காப்பு கட்டுதலும் நடந்தது. அன்று இரவு பாரத கூத்து துவக்கமும், சாமி வீதி உலாவும் நடந்தது. பின், 12ம் தேதி சாமி வில் வளைப்பும், சாமி வீதி உலாவும் நடந்தது.தொடர்ந்து 13ம் தேதி பாஞ்சாலியம்மன் திருக்கல்யாணமும், 14ம் தேதி துகில்உரிதலும் நடந்தது. அன்று இரவு இந்திர விமான முத்துபல்லக்கில் திரவுபதியம்மன், அர்சுனர், கிருஷ்ணர் வீதி உலா நடந்தது. நேற்றுகாலை 6:00 மணிக்கு தபசு மரம் ஏறும் நிகழ்ச்சியும் நடந்தது. இதையடுத்து, இன்று 18ம் போர் நிறைவாக துரியோதனன் படுகளம் நிகழ்ச்சியும் நடக்கஉள்ளது. நாளை மாலை 6 :00 மணிக்கு தீமிதி நடைபெறுகிறது. விழா ஏற்பாடுகளை கிராம பொதுமக்கள் மற்றும் விழா குழுவினர்செய்துள்ளனர்.