உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பழநி மாரியம்மன் கோயிலுக்கு ரூ.18லட்சம் செலவில் புதுத்தேர்

பழநி மாரியம்மன் கோயிலுக்கு ரூ.18லட்சம் செலவில் புதுத்தேர்

பழநி: பழநி முருகன் கோயில் நிர்வாகத்திற்குட்பட்ட மாரியம்மன் கோயிலுக்கு ரூ.18 லட்சத்தில் புதிதாக தேர் செய்யும் பணி இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. விரைவில் வெள்ளோட்டம் நடக்க உள்ளது. திண்டுக்கல் மாவட்டம் பழநி கிழக்குரத வீதி மாரியம்மன் கோயிலுக்கென தனித்தேர் இல்லை. மாசிதிருவிழாவில் தேரோட்டம் நடத்த பெரியநாயகியம்மன் கோயில் தைப்பூசத் தேரை பயன்படுத்தினர். எனவே மாரியம்மன் கோயிலுக்கு தனியாக, ரூ.18 லட்சம் செலவில், புதிய தேரை 14.3அடி உயரம், 9.8அடி நீளத்தில் வடிவமைக்கும் பணி இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. ஓரிரு மாதங்களில் இப்பணி முடிந்து, வெள்ளோட்டம் நடைபெறஉள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !