மந்தை முத்தாலம்மன் கோயில் வைகாசி உற்ஸவம்
ADDED :3040 days ago
அலங்காநல்லூர், பாலமேடு அருகே வி.புதூர் மந்தை முத்தாலம்மன் கோயில் வைகாசி உற்ஸவ விழா நடந்தது. விநாயகருக்கு பொங்கல் வைக்கப்பட்டது. கிராம தெய்வங்களுக்கு சர்வ அலங்காரம் செய்யப்பட்டது. பக்தர்கள் மாவிளக்கு, பால்குடம், அக்னிசட்டி எடுத்தல், அங்கபிரதட்சனம், கிடாய்வெட்டுதல் நேர்த்திகடன்களை செலுத்தினர். பின் முத்தாலம்மன் ஊர்வலமாக பூஞ்சோலைக்கு சென்றார். அங்கு மஞ்சள் நீராட்டுதலுடன் திருவிழா நிறைவுற்றது. ஏற்பாடுகளை கிராமத்தினர் செய்திருந்தனர்.