உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / வல்லப கணபதி கோவிலில் நாளை கும்பாபிஷேகம்

வல்லப கணபதி கோவிலில் நாளை கும்பாபிஷேகம்

கோவை: சிங்காநல்லுார் வல்லப கணபதி கோவில் கும்பாபிஷேகம் நாளை நடக்கிறது. சிங்காநல்லுார், பாலசுந்தரம் லே-அவுட்டில் அமைந்துள்ளது, வல்லப கணபதி கோவில். இந்த கோவில் கும்பாபிஷேக விழா, இன்று காலை, 7:30 மணிக்கு, மகா கணபதி ேஹாமம், கோபுர கலசம் பிரதிஷ்டை நடக்கிறது. மாலை, 4:30 மணி முதல், கோ பூஜை, முதல் கால யாக வேள்வி, த்வார பூஜை நடக்கிறது. தொடர்ந்து, கருவறையில் விநாயகர் பிரதிஷ்டை செய்யப்படுகிறது. நாளை அதிகாலை, 5:00 மணி முதல், இரண்டாம் கால வேள்வி, பிம்பசுத்தி, நாடிசந்தானம், யாத்ரா தானம் நடக்கிறது. காலை, 7:30 மணிக்கு, கலசங்கள் கோவிலை சுற்றி கொண்டுவரப்படுகிறது. 7:52 மணிக்கு, கோபுர கலசங்களுக்கு கும்பாபிஷேகம் செய்யப்படுகிறது. இதைத்தொடர்ந்து, வல்லப கணபதி, மூஷிகம் மணி மண்டபத்தில் எழுந்தருளியுள்ள சிவன், நந்தி தேவருக்கு மகா அபிஷேகம், தீபாராதனை நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !