உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / இரும்பை கோவிலில் நாளை திருவாசகம் முற்றோதல் நிகழ்ச்சி

இரும்பை கோவிலில் நாளை திருவாசகம் முற்றோதல் நிகழ்ச்சி

திருச்சிற்றம்பலம் கூட்ரோடு:இரும்பை மாகாளேஸ்வரர் கோவிலில், திருவாசகம் முற்றோதல் நிகழ்ச்சி நாளை நடக்கிறது.புதுச்சேரி அருகேயுள்ள இரும்பை கிராமத்தில், பிரசித்திப் பெற்ற, மதுசுந்தர நாயகி உடனுறை மாகாளேஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில், மாகாளேஸ்வரர் பிரதோஷ வழிபாட்டு சிவனடியார் திருக்கூட்டம் சார்பில், நாளை (17ம் தேதி) காலை 8:00 மணி முதல், மாலை 6:00 மணி வரை, தமிழ் வேதமாகிய திருவாசகம் முற்றோதல் நிகழ்ச்சி நடக்கிறது. சிவனடியார் திருக்கூட்ட சேதுபதி, திருவாசகம் ஓதுகிறார். நிகழ்ச்சி ஏற்பாடுகளை, கிராம மக்கள் மற்றும் இரும்பை நாதர் பிரதோஷ வழிபாட்டுக்குழு சிவனடியார் திருக்கூட்டம் செய்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !