செங்கல்பட்டில் சிவனடியார் பெருமன்ற விழா
ADDED :2748 days ago
செங்கல்பட்டு: செங்கல்பட்டில், சிவனடியார் பெருமன்றம் எட்டாம் ஆண்டு விழா, நேற்று நடந்தது. செங்கல்பட்டில், செங்கை சிவனடியார் பெருமன்றம் எட்டாம் ஆண்டு விழாவை முன்னிட்டு, ஏகாம்பரநாதர் கோவில் வளாகத்தில், நடராஜர் சுவாமி சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளினார். விழாவிற்கு, லயோலா கல்லுாரி முன்னாள் பேராசிரியார் பாலறாவாயன் தலைமை வகித்தார். சீனியர் வழக்கறிஞர்கள் கனகராஜ், பாலகிருஷ்ணன் முன்னிலை வகித்தனர். குடந்தை லட்சுமணன் குழுவினர், திருமுறை இன்னிசை மற்றும் கருத்தரங்கம் நடந்தது. தலைவர் பழனிசாமி வரவேற்றார்; செயலர் சந்திரசேகரன் நன்றி கூறினார்.