திரவுபதி அம்மனுக்கு 108 பால்குட அபிஷேகம்
ADDED :2749 days ago
பெரணமல்லூர்: பெரணமல்லூர் அருகே, மழை வேண்டி திரவுபதி அம்மனுக்கு, 108 பால் குட அபி?ஷகம் நடந்தது. திருவண்ணாமலை மாவட்டம், பெரணமல்லூர் அடுத்த, ஆவணியாபுரம் கிராமத்தில், மழை வேண்டி திரவுபதி அம்மனுக்கு, 108 பால்குட அபி?ஷகம் நடத்தினர். நேற்று அதிகாலை, ஆவணியாபுரம் பகுதியில் உள்ள, லட்சுமி நரசிம்மர் கோவில் வளாகத்திலிருந்து, விரதமிருந்த, பெண் பக்தர்கள், 108, பால் குடங்களை ஊர்வலமாக எடுத்து சென்று, திரவுபதி அம்மனுக்கு, சிறப்பு அபிஷேகம் செய்தனர்.