உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சக்திவிநாயகர் கோவில் கும்பாபிஷேகம் கோலாகலம்

சக்திவிநாயகர் கோவில் கும்பாபிஷேகம் கோலாகலம்

இடைப்பாடி: இடைப்பாடி, சக்திவிநாயகர் கோவில் கும்பாபிஷேகம், நேற்று நடந்தது. அதில், கோபுர கலசம் மீது புனிதநீர் ஊற்றி, ஆச்சாரியார்கள், கும்பாபிஷேகத்தை நடத்திவைத்தனர். தொடர்ந்து, சுற்றியிருந்த பக்தர்கள் மீது, தீர்த்தத்தை தெளித்தனர். இதையொட்டி, சிறப்பு அலங்காரத்தில், விநாயகர் அருள்பாலித்தார். சுற்றுவட்டார பகுதிகளிலிருந்து, ஏராளமான பக்தர்கள், சுவாமியை தரிசித்தனர்.

* ஏற்காடு, கே.புத்துர், இளையராமர், சேர்வராய பெருமாள், மணியப்பன் கோவில் கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு, நேற்று காலை, நான்காம் கால யாக பூஜை நடந்தது. தொடர்ந்து, கலசங்கள் கோபுரத்தில் பொருத்தப்பட்டது. கருவறையில் சுவாமி சிலைகள் அலங்கரிக்கப்பட்டு, பாலாபிஷேகம் நடத்தி, கும்பாபி?ஷகம் கோலாகலமாக நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !