சுயம்பு மாரியம்மன் கோவில் குடமுழுக்கு
ADDED :2686 days ago
நாமக்கல்: நாமக்கல், அன்புநகர் சுயம்பு மாரியம்மன் திருக்கோவில் கும்பாபி?ஷக விழா, கோலகலமாக நடந்தது. நாமக்கல் - மோகனூர் சாலை, வீட்டு வசதி வாரியக் குடியிருப்பு, அன்பு நகரில் சுயம்பு மாரியம்மன் கோவில் உள்ளது. கோவிலில் திருப்பணிகள் நடந்தன. அதை முன்னிட்டு கும்பாபி?ஷக விழா, கடந்த, 15ல் துவங்கியது. பக்தர்கள் தீர்த்தம் எடுத்து வந்தனர். நேற்று காலை, 6:00 மணிக்கு, நான்காம் கால யாகசாலை பூஜை, பூர்ணாஹூதி நடந்தது. கலசக் குடங்கள் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு, மாரியம்மன் கோபுரம் மற்றும் பரிவார தெய்வங்களின் கோபுரங்களுக்கு புனிதநீர் ஊற்றி கும்பாபி?ஷகம் செய்யப்பட்டது. தொடர்ந்து, மூலவருக்கு கும்பாபி?ஷகம், தீபாராதனை நடந்தது. திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர், ஏற்பாடுகளை, விழா குழுவினர் செய்திருந்தனர்.