கரியகாளியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா
ADDED :2684 days ago
பு.புளியம்பட்டி: புன்செய்புளியம்பட்டி அடுத்த பெரியகுமாரபாளையத்தில், பழமை வாய்ந்த கரியகாளியம்மன் கோவில் உள்ளது. இங்கு நடந்த திருப்பணி நிறைவடைந்தது. கடந்த, 15ல், கும்பாபிஷேக விழா தொடங்கியது. நேற்று முன்தினம், கரியகாளியம்மன் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டது. நேற்று காலை, கணபதி யாகம் மற்றும் யாகசாலை பூஜைகள் செய்து, கோபுர கலசத்துக்கு புனிதநீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடந்தது. பின், மூலவர் கரியகாளியம்மனுக்கு கும்பாபிஷேகம் செய்து தீபாராதனை நடந்தது. விழாவை முன்னிட்டு, கோவில் வளாகத்தில், நாட்டு மாடு கண்காட்சி நடந்தது. காங்கேயம் காளை, நாட்டு எருது, உழவு மாடு உள்ளிட்ட, 50க்கும் மேற்பட்ட மாடுகள் அழைத்து வரப்பட்டன. பக்தர்கள், விவசாயிகள் பார்வையிட்டனர்.