ஈரோடு மாரியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா
ADDED :2684 days ago
ஈரோடு: ஈரோடு காசிபாளையம், விநாயகர், மாரியம்மன், மாகாளியம்மன் கோவில் மஹா கும்பாபி?ஷக விழா, கடந்த, 15ல் தொடங்கியது. நேற்று, நான்காம் கால யாக பூஜை, மஹா பூர்ணாஹூதி, தீபாராதனை நடந்தது. இதை தொடர்ந்து காலை, 7:30 மணிக்கு, கோபுர கலசங்களுக்கு மஹா கும்பாபி?ஷகம் நடந்தது. சிவாச்சாரியார்கள் கலசத்துக்கு, புனித நீர் உற்றியபோது, கலச தரிசனம் செய்து, பக்தர்கள் கோஷமிட்டனர். சூரம்பட்டி, காசிபாளையம், ரங்கம்பாளையம் பகுதிகளை சேர்ந்த மக்கள் கலந்து கொண்டனர்.