ஆஞ்சநேயர் கோவில் கும்பாபிஷேக விழா
ADDED :2684 days ago
கிருஷ்ணராயபுரம்: லாலாப்பேட்டை கொடிக்கால் தெரு, ராம ஆஞ்சநேயர் கோவில் கும்பாபிஷேக விழா, நேற்று நடந்தது. கிருஷ்ணாரயபுரம் அடுத்த, லாலாப்பேட்டை கொடிக்கால் தெருவில், பழமையான ஆஞ்சநேயர் கோவில் உள்ளது. இக்கோவிலில், ராம ஆஞ்சநேயர், கோதண்டராமர், கிருஷ்ணர் உள்ளிட்ட சுவாமிகளின் சன்னதியுடன் புதிதாக கோவில் கட்டப்பட்டது. கடந்த, 15ல், முதல் கால யாக பூஜை துவங்கியது. நேற்று காலை, கோவில் கோபுர கலசத்திற்கு புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடந்தது. சுற்றுவட்டார பகுதியில் இருந்து ஏரளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.