சீதா கல்யாண உற்சவ விழா
ADDED :2684 days ago
கரூர்: கரூர் அருகே, சீதா கல்யாண உற்சவ விழா நேற்று நடந்தது. சீதா கல்யாண கமிட்டி சார்பில், 17வது அண்டு, கல்யாண மகோத்சவ விழா கடந்த, 15ல், காந்தி கிராமம் தனியார் திருமண மண்டபத்தில், லட்சார்ச்சனையுடன் துவங்கியது. நேற்று முன்தினம் ஸ்ரீகாந்த் கவுண்டன்ய பாகவதரின், அஷ்பதி பஜனை, பிரீத்தி நந்தகுமாரின் திவ்ய நாம சங்கீர்த்தனம் ஆகியவை நடந்தன. நேற்று காலை, 7:00 மணிக்கு, மாப்பிள்ளை அழைப்பு மதியம், 12:30 மணிக்கு சீதா கல்யாண மகோத்ஸவம் நடந்தது. ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சுவாமியை வழிபட்டனர். அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. இன்று காலை, 9:00 மணிக்கு, ஆஞ்சநேயர் உற்சவம் நடக்கிறது.