உடுமலை சித்தநாதீஸ்வரர் கோவில் ஆண்டு விழா
ADDED :2684 days ago
உடுமலை: உடுமலை, மலையாண்டிபட்டணம் சித்தநாதீஸ்வரர் கோவில் ஆண்டுவிழா நடந்தது. மலையாண்டிபட்டணம் சித்தநாதீஸ்வரர் அழகாம்பிகை அம்மன் கோவில் ஆண்டு விழா இரண்டு நாட்கள் நடந்தது. முதல் நாளில், சித்தநாதீஸ்வரர் சுவாமிகளுக்கு சிறப்பு அபிேஷக அலங்கார பூஜை மற்றும் காலபூஜைகள் நடந்தன. தொடர்ந்து, சித்தநாதீஸ்வரர் அழகாம்பிகை அம்மன் திருக்கல்யாண வைபவம் இடம்பெற்றது.கோவிலை சுற்றியுள்ள முக்கிய வீதிகளில், சுவாமிகளின் திருவீதி உலா நடந்தது. பக்தர்கள் திரளாக பங்கேற்று, திருக்கல்யாண வைபவத்தை கண்டு மகிழ்ந்தனர். பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.