அணைக்கும் ஆண்டவர்!
ADDED :2763 days ago
ஒரு பள்ளியில் குழந்தைகளின்கலைநிகழ்ச்சிக்கு ஏற்பாடுசெய்யப்பட்டிருந்தது. சிறுவர், சிறுமிகள் மேடையேறினர். ஒரு சிறுமி மட்டும், மேடை பயம் காரணமாக உடையில்சிறுநீர் கழித்துவிட்டாள். கலைநிகழ்ச்சிக்கு வந்தவர்கள் இதைப் பார்த்து சிரித்தனர். அந்த சிறுமி அழ ஆரம்பித்து விட்டாள். அவளது தந்தை ஓடிச்சென்று மேடையில் நின்ற தன் குழந்தையை துõக்கி மார்போடு அணைத்து ஆறுதல் சொன்னார். அதாவது, தன் குழந்தை மற்றவர்கள் முன்னிலையில் அவமானப்படுவதை, அந்ததகப்பனுடைய இருதயம் ஏற்றுக் கொள்ளவில்லை. அதுபோலவே நம்முடைய பரமதகப்பனாகிய ஆண்டவர் நாம் வெட்கப்பட்டு போவதைவிரும்புகிறதில்லை. நமக்கு அவமானம் ஏற்படும் காலங்களில் அவர் நம்மை அணைத்துக் கொள்கிறார்.“என் ஜனங்கள் ஒருபோதும் வெட்கப்பட்டு போவதில்லை” என்றவசனமும், “பயப்படாதே, நீவெட்கப்படுவதில்லை,” என்றவசனமும் இதை மெய்ப்பிக்கின்றன.