சாத்துார் வெங்கடாசலபதி கோயில் ஆனி விழா துவங்கியது
ADDED :2767 days ago
சாத்துார்: சாத்துார் வெங்கடாசலபதி திருக்கோயில் ஆனி திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது. கோயில் தக்கார் சுமதி தலைமை வகித்தார்.நிர்வாகஅலுவலர் சுந்தரராசு முன்னிலை வகித்தார். ரெங்கநாதபட்டர் கொடி மரத்திற்கு சிறப்பு அபிஷேகம் தீபாராதனை செய்து கொடியேற்றினார். இதன் பின்னர் உற்சவருக்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் ஜூன் 28ல் நடைபெறுகிறது. தினமும் சுவாமி பல்வேறு வாகனங்களில் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார். ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறை அலுவலர்கள் மற்றும் உபயதாரர்கள் செய்துள்ளனர்.