ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் ராவணன் சம்ஹாரம்
ADDED :2766 days ago
ராமேஸ்வரம், ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் ராமலிங்க பிரதிஷ்டை விழா யொட்டி, ராமர் ,ராவணன் சம்ஹாரம் நிகழ்ச்சி நடந்தது. ராமலிங்க பிரதிஷ்டை விழாவையொட்டி, நேற்று துவங்கியதால் கோயிலில் இருந்து ராமர், லெட்சுமணர், அனுமானுடன் பல்லாக்கில் புறப்பாடாகி, திட்டகுடி துர்க்கை கோயில் முன்பு எழுந்தருளினார். இதன் பின் ராமர், இலங்கை மன்னர் ராவணனை சம்ஹாரம் செய்யும் நிகழ்ச்சியை கோயில் குருக்கள் உதயகுமார் நடத்தினார். பின் ராமருக்கு மகா தீபாரதனை நடந்தது. இதில் கோயில் இணை ஆணையர் மங்கையர்கரசி, உதவி ஆணையர் பாலகிருஷ்ணன், உதவி கோட்ட பொறியாளர் மயில்வாகனன், பஷே்கார்கள் அண்ணாதுரை, கமலநாதன், ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.