உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மேட்டுப்பாளையம் காமாட்சி அம்மன் திருக்கல்யாணம்

மேட்டுப்பாளையம் காமாட்சி அம்மன் திருக்கல்யாணம்

மேட்டுப்பாளையம்: காரமடை, காந்தி மைதானம் பாவடியில் காமாட்சி அம்மன் கோவில் உள்ளது. ஆனி மாதஉத்திர நாளான நேற்று, திருமஞ்சன திருவிழா, வேள்வி வழிபாடுடன் துவங்கியது. ஏகாம்பரமேஸ்வர சுவாமிக்கும், காமாட்சி அம்மனுக்கும் திருக்கல்யாண உற்சவம் நடந்தது. சிவாச்சாரியார்கள் உற்சவத்தை நடத்தினர். மாலை மாற்றுதல், பாத பூஜை, ஊஞ்சல் உற்சவம் நடந்தன. பெண்கள் சீர் தட்டுகளுடன் பங்கேற்றனர். கோவில் அறங்காவலர் சுப்பிரமணி, செங்குந்த மகாஜன சங்க வட்டார தலைவர் குழந்தைவேல் உட்பட நிர்வாகிகள், ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். மாங்கல்ய கயிறு, பிரசாதம், அன்னதானம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !