உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / காளியம்மன் கோயிலில் முளைப்பாரி திருவிழா

காளியம்மன் கோயிலில் முளைப்பாரி திருவிழா

திருப்புவனம்: திருப்புவனம் புதுார் காளியம்மன் கோயிலில் மழை வேண்டி முளைப்பாரி விழா நடைபெற்றது. கடந்த 12ம் தேதி காப்பு கட்டுதலுடன் விழா தொடங்கியது. தினசரி திருவிளக்கு பூஜை, கரகம், பால்குடம் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடந்தன. 19ம் தேதி முளைப்பாரி எடுத்து திருப்புவனம் நகரின் முக்கிய வீதிகள் வழியாக பக்தர்கள் வலம் வந்தனர். நேற்று காலையில் முளைப்பாரி குளத்தில் கரைக்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !