உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பெரியகுளம் பாலசுப்பிரமணியர் கோயில் கும்பாபிஷேகம்: ஜூன் 25ல் நடக்கிறது

பெரியகுளம் பாலசுப்பிரமணியர் கோயில் கும்பாபிஷேகம்: ஜூன் 25ல் நடக்கிறது

பெரியகுளம்: பெரியகுளம் பாலசுப்பிரமணியர் கோயில் கும்பாபிஷேகம் ஜூன் 25ல் நடக்கிறது.  இதற்கான யாகசாலை பூஜை நாளை துவங்குகிறது. அறநிலையத்துறைக்கு சொந்தமான இக்கோயில் நுாற்றாண்டு பழமை வாய்ந்ததாகும். காசிக்கு அடுத்தபடியாக, இக்கோயில் அருகே செல்லும் வராகநதி கரையோர இருபுறங்களிலும் ஆண், பெண் மருதமரம் அமைந்திருப்பது கூடுதல் சிறப்பு. 2013ல் கோயிலில் திருப்பணி துவங்கியது. ராஜகோபுரம் கட்டுமானப்பணி முடிந்துள்ள நிலையில், அறம்வளர்த்தநாயகி, ராஜேந்திரசோழீஸ்வரர், பாலசுப்பிரமணியர் சன்னதிகளுக்கு எதிராக புதிதாக மூன்று கொடிமரம் அமைக்கப்பட்டுள்ளது. கன்னிமூல கணபதி, லட்சுமி, சரஸ்வதி, சுப்பிரமணியர், , நவக்கிரஹம், உட்பட 157 சுவாமி, அம்மன்  சிலைகளும், துாண்களும் பழமை மாறாமல் பாரம்பரியமுறைப்படி கட்டப்பட்டுள்ளது.

ஜூன் 25 காலை 9:05 மணி முதல் 9:25 மணிக்குள்  கும்பாபிஷேகம் நடைபெறுகிறது. மதுரை மீனாட்சி கோயில் அர்ச்சகர் ராஜாபட்டர் இதனை  நடத்தி வைக்கிறார். இதையொட்டி நாளை காலை  யாகசாலை பூஜைகள் துவங்குகிறது. ஏற்பாடுகளை துணைமுதல்வர் ஓ.பன்னீர் செல்வம் தலைமையில் திருப்பணிக்குழு உறுப்பினர்கள் சசிதரன், சிதம்பரசூரியவேலு, ஓ.ராஜா, நாகராஜ், பாண்டியராஜ், தேனி  அ.தி.மு.க., ஜெ., பேரவை மாவட்ட செயலாளர் ரவீந்திரநாத்குமார், கைலாசநாதர் கோயில் அன்பர் பணி செய்யும் பராமரிப்புக்குழு தலைவர் ஜெயபிரதீப் செய்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !