சக்தி மாரியம்மன் கோவில் விழா பக்தர்களுக்கு அன்னதானம்
ADDED :2695 days ago
கோவை : பி.கே.டி., நகர் சக்தி மாரியம்மன் கோவில் ஆண்டு விழாவை முன்னிட்டு, பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.கோவை, அவிநாசி ரோடு, வரதராஜா மில்ஸ், பி.கே.டி., நகரில் ஸ்ரீ சக்தி மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலின், 21ம் ஆண்டு விழா நிகழ்ச்சி நேற்று நடந்தது. ஆண்டு விழாவை முன்னிட்டு, காலை, 7:00 மணி முதல் கோவிலில் கணபதி ஹோமம், நவக்கிரக ஹோமம், துர்கா ஹோமம் ஜபம் நடத்தப்பட்டது.இதன்பின், அம்மனுக்கு சிறப்பு அபிஷேக பூஜைகள், அலங்கார தீப ஆராதனை காட்டப்பட்டது. தொடர்ந்து, பக்தர்களுக்கு கோவில் வளாகத்தில் அன்னதானம் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில், பி.கே.டி., நகர் மற்றும் சுற்று பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.