உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மீனாட்சி அம்மன் கோயிலில் ஆனி உத்திர திருமஞ்சனம்

மீனாட்சி அம்மன் கோயிலில் ஆனி உத்திர திருமஞ்சனம்

மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோயில் 100 கால் மண்டபத்தில் ஆனி உத்திர திருமஞ்சனம் இன்று (ஜூன் 21) காலை 6:00 மணிக்கு நடக்கிறது. இதையொட்டி பழைய திருக்கல்யாண மண்டபத்தில் பாலாபிஷேகம், இரவு 7:00 மணிக்கு பஞ்ச மூர்த்திகள் ரிஷப வாகனத்தில் மாசி வீதிகளில் புறப்பாடு நடக்கிறது. இரவு 3:00 மணிக்கு பஞ்ச சபை நடராஜர், சிவகாமி அம்மனுக்கு பிரதான மாறியாடுவார். நடராஜர் சிவகாமியம்மனுக்கு சுவாமி கோயில் ஆறு கால் பீடத்திலும், 100 கால் மண்டபத்திலும் ஆனி  உத்திர திருமஞ்சனம் காலை 6:00 மணிக்கு நடக்கிறது. கால பூஜை முடிந்து காலை 7:00 மணிக்கு மேல் பஞ்ச சபை நடராஜர், சிவகாமியம்மன் மாசி வீதிகளில் புறப்பாடு நடக்கிறது. இதை முன்னிட்டு பூஜை பொருட்களை கோயிலில் வழங்கலாம், என நிர்வாகம் தெரிவித்துள்ளது. ஏற்பாடுகளை தக்கார் கருமுத்து கண்ணன், இணை கமிஷனர் நடராஜன் செய்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !