கடத்தூர் காளியம்மன் கோவில் குண்டம் திருவிழா
                              ADDED :2688 days ago 
                            
                          
                          கடத்தூர்: கடத்தூரில் நடந்த, காளியம்மன், மாரியம்மன் கோவில் குண்டம் விழாவில், ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். தர்மபுரி மாவட்டம், கடத்தூரில் உள்ள காளியம்மன், மாரியம்மன் கோவில் திருவிழா, கடந்த, 18ல், கொடியேற்றத்துடன் துவங்கியது. கடந்த, 19ல், அம்மனுக்கு மகா அபிஷேக ஆராதனையும், கூழ் ஊற்றுதலும், 20ல் காலை, அம்மனுக்கு பொங்கல் வைத்தலும் நடந்தது. நான்கு நாட்கள் நடந்த விழாவில், நேற்று காலை, குண்டம் விழா நடந்தது. இதில், ஏராளமான பக்தர்கள், தீக்குண்டத்தில் இறங்கி, நேர்த்திக்கடன் செலுத்தினர்.