உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / காளியம்மன், பகவதியம்மன் கோயில் திருவிழா

காளியம்மன், பகவதியம்மன் கோயில் திருவிழா

கொடைரோடு, அம்மையநாயக்கனுார் அருகே இந்திரா நகரில், காளியம்மன், பகவதியம்மன் கோயில் திருவிழா நடந்தது. சாட்டுதலுடன் துவங்கிய விழாவில், விநாயகர் பூஜை நடந்தது. சுவாமி அழைப்பு, கண் திறப்பு, மலர் அலங்காரத்துடன் சுவாமி ஊர்வலம் நடந்தது. கிராம அபிஷேகத்தை தொடர்ந்து, ஏராளமான பக்தர்கள், மாவிளக்கு எடுத்தல், அக்னிச்சட்டி எடுத்தல், பொங்கல் வைத்தல் உள்ளிட்ட நேர்த்திக்கடன்களை செலுத்தினர். முளைப்பாரி ஊர்வலம், மஞ்சள் நீராடலுடன், சுவாமி பூஞ்சோலை புறப்பாடு நடந்தது. ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !