கருப்ப ஞானியார் கோயிலில் ஆனி குருபூஜை
ADDED :2779 days ago
ராஜபாளையம்: ராஜபாளையம் அம்பலப்புளி பஜார் கருப்பஞானியார் சுவாமி சமாது கோயில் வளாகத்தில் பொன்னப்பஞானியார் சுவாமிகள் ஜீவ ஐக்கிய சமாது குருபூஜை விழா நடந்தது. சுவாமிகளுக்கு சிறப்பு முப்பழ பூஜையுடன் விழா தொடங்கி, பிரகாரத்தில் உள்ள விநாயகர், முருகன், தட்சிணாமூர்த்தி, துர்க்கை, ஆஞ்சநேயர், பிரம்மா உள்ளிட்ட தெய்வங்களுக்கும் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன. பூக்களால் அலங்கரிக்கப்பட்டு வழிபாடு நடந்தது. சுற்றுப்பகுதி பக்தர்கள் கலந்து கொண்டனர், அன்னதானம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை ஞானியார், பூஜை முறைதாரர் சோமசுந்தரம், ஞானகுரு, விநாயகமூர்த்தி, கணேசன் செய்தனர்.