உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சிவகாமசுந்தரி அம்மனுக்கு ரூ.15 லட்சத்தில் தங்க மஞ்சம்

சிவகாமசுந்தரி அம்மனுக்கு ரூ.15 லட்சத்தில் தங்க மஞ்சம்

சிதம்பரம்: சிதம்பரம் நடராஜர் கோவில் சிவகாமசுந்தரி அம்மனுக்கு காணிக்கையாக 15 லட்சம் ரூபாய் மதிப்பில் தங்க முலாம் பூசப்பட்ட மஞ்சம் வழங்கப்பட்டது. சென்னையைச் சேர்ந்த ஓய்வு பெற்ற இன்ஜினியர் ஆதிமூலம், 65; இவர் சிதம்பரம் நடராஜர் கோவில் சிவகாமசுந்தரி அம்மன் புறப்பாடு செய்வதற்கான, தங்க முலாம் பூசப்பட்ட  மஞ்சம் (பல்லாக்கு) அன்பளிப்பாக வழங்கியுள்ளார். நான்கு அடி அகலம் கொண்ட புதிய மஞ்சம் தேக்கு மரத்தால் செய்யப்பட்டு, அதன் மீது செப்பு தகடு பொருத்தப்பட்டுள்ளது. செப்பு தகடு மீது சுத்த தங்கம் மூலாம் மேல் பூச்சு செய்யப்பட்டுள்ளது. இதற்கு ஒரு கிலோ தங்கம் பயன்படுத்தப்பட்டுள்ளது. சிதம்பரம் நடராஜா ஜூவல்லரி உரிமையாளர் ராமநாதன் மேற்பார்வையில் தற்போது இருக்கும் மஞ்சம் போன்று வடிவமைக்கப்பட்டுள்ளது. இதன் மதிப்பு 15 லட்சம் ரூபாய் ஆகும். இந்த மஞ்சத்தை ஆதிமூலம் தனது குடும்பத்துடன் நடராஜர் கோவிலில் சுவாமி தரிசனம் செய்து, கோவில் பொது தீட்சிதர் செயலர் நடேஸ்வர தீட்சிதரிடம் காணிக்கையாக ஒப்படைத்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !