உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஒலக்கூர் முத்தாலம்மன் கோவில் கும்பாபிஷேகம்

ஒலக்கூர் முத்தாலம்மன் கோவில் கும்பாபிஷேகம்

திண்டிவனம்: ஒலக்கூர் முத்தாலம்மன் கோவில் கும்பாபிஷேகத்தில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். திண்டிவனம் அருகே உள்ள ஒலக்கூர் முத்தாலம்மன் கோவில்கும்பாபிஷேகம் விழா, கடந்த 20ம் தேதி காலை விக்னேஸ்வர பூஜை, கணபதிஹோமம் மற்றும் முதல்கால யாக பூஜையுடன் துவங்கியது. மறுநாள் இரண்டாம் கால யாக பூஜையும், அஷ்டபந்தன மருந்து சாத்துதல் நிகழ்ச்சியும் நடந்தது. நேற்று காலை நான்காம் கால யாகசாலை பூஜை நடந்தது. காலை 8:30 மணிக்கு மகா பூர்ணாஹூதி, 9:00 மணிக்கு யாத்ராதானமும், கடம் புறப்பாடும் நடந்தது. காலை 9:30 மணிக்கு முத்தலாம்மன் விமான கும்பாபிஷேகமும், 9:45 மணிக்கு முத்தலாம்மன் பரிவாரங்களுக்கு கும்பாபிஷேகமும் நடந்தது.தொடர்ந்து மகா தீபாராதனையும், பக்தர்களுக்கு அன்னதான நிகழ்ச்சியும் நடந்தது.

விழாவில், பல்வேறு கிராமங்களை சேர்ந்த நுாற்றுக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில், எம்.எல்.ஏ.,க்கள் மஸ்தான், சீத்தாபதிசொக்கலிங்கம், திண்டிவனம் நஷே்னல் கல்லுாரி தாளாளர் தியாகராஜன், ராம்டெக்ஸ் வெங்கடேசன், புதுச்சேரி ராம்சில்க்ஸ் நடராஜன், ராம்தங்கமாளிகை ரமணிகாந்தன், புதுச்சேரி வழக்கறிஞர் முனுசாமி, மாவட்ட ஜெ.,பேரவை துணை செயலாளர் அன்பழன், ஒலக்கூர் ஒன்றிய தி.மு.க., செயலாளர் சொக்கலிங்கம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். விழா ஏற்பாடுகளைகோவில் நிர்வாகிகள் ஞானசேகரன், ராமு மற்றும் ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !