உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / லட்சுமி நரசிம்மசுவாமி கோவிலில் கொடியேற்றம்

லட்சுமி நரசிம்மசுவாமி கோவிலில் கொடியேற்றம்

தர்மபுரி: தர்மபுரி அடுத்த, அளேபுரம் லட்சுமி நரசிம்மசுவாமி கோவில் தேர்த்திருவிழாவை முன்னிட்டு, நேற்று கொடியேற்றம் நடந்தது. தேர்த்திருவிழாவை முன்னிட்டு, நேற்று காலை, 9:00 மணிக்கு மேல், கோவில் வளாகத்தில் உள்ள கொடி மரத்தில், கொடியேற்றம் நடந்தது. வரும், 25ல், இரவு, 7:00 மணிக்கு சுவாமி திருக்கல்யாணம் நடக்கிறது. 27 காலை, 7:00 மணிக்கு பொதுமக்கள் தேர் இழுக்கும் நிகழ்ச்சி நடக்கிறது. 29ல், சுவாமி பல்லக்கு உற்சவம், 30ல், சயனோற்சவம் நடக்கிறது. ஏற்பாடுகளை, செயல் அலுவலர் ராஜா செய்து வருகிறார்.



தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !