வரதராஜபெருமாள், செல்லாயி அம்மன் கோயில் கும்பாபிஷேகம்
ADDED :2857 days ago
அலங்காநல்லுார், அலங்காநல்லுார் அருகே அழகாபுரியில் 13 ஆண்டுகளுக்கு பின் வரதராஜபெருமாள், செல்லாயி அம்மன் கோயில் கும்பாபிஷேகம் நடந்தது. இருநாட்களாக யாகசாலை பூஜை நடந்தது. நேற்று காலை வேத மந்திரங்கள் முழங்க கோபுர கலசத்தில் புனித நீர் ஊற்றப்பட்டது. பின் பெருமாள் மற்றும் அம்மனுக்கு அபிஷேகமும், சிறப்பு அலங்காரம், தீபாராதனை நடந்தது. விநாயகர், கருப்பசாமி உள்ளிட்ட பரிவார தெய்வங்களுக்கும் அபிஷேகம் நடந்தது.அன்னதானம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை கிராம மக்கள், விழா குழுவினர் செய்திருந்தனர்.