வழக்கறுத்தீஸ்வரர் தேரோட்டம் விமரிசை
ADDED :2699 days ago
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் வழக்கறுத்தீஸ்வரர் கோவிலின், 7ம் நாள் உற்சவமான நேற்று, தேரோட்டம் விமரிசையாக நடந்தது.காஞ்சிபுரம் காந்தி சாலையில், வழக்கறுத்தீஸ்வரர் மற்றும் பராசரேஸ்வரர் கோவில் உள்ளது. பல்வேறு வழக்குகளில் சிக்கியோர், இங்கு கோவிலில் வழிபட்டால், பிரச்னைகள் தீர்ந்துவிடும் என்பது, பக்தர்கள் நம்பிக்கை. இக்கோவில் வரலாற்றில், முதன் முறையாக, 10 நாட்கள், ஆனி உத்திர திருக்கல்யாண பிரம்மோற்சவம் நடத்த முடிவு செய்யப்பட்டு, 16ல் கொடியேற்றப்பட்டது. தினமும், காலை, மாலையில் சுவாமி பல்வேறு வாகனங்களில் எழுந்தருளினார். ஏழாம் நாள் உற்சவமான நேற்று காலை, காமாட்சி அம்பிகை, மருகுவார் குழலி அம்பிகையுடன், வழக்கறுத்தீஸ்வரர், அலங்கரிக்கப்பட்ட தேரில் எழுந்தருளினார். பக்தர்கள் வடம் பிடித்து இழுக்க, நகரின் முக்கிய வீதிகள் வழியாக, சுவாமி பவனி வந்தார்.