சேத்தப்பட்டு மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம்
ADDED :2693 days ago
சேத்துப்பட்டு: திருவண்ணாமலை மாவட்டம், சேத்துப்பட்டு அரச மரத்தெருவில் அமைந்துள்ள, முகமாரியம்மன் கோவில், கும்பாபிஷேக விழா இன்று, 25ல், நடக்க உள்ளது. இதை முன்னிட்டு, நேற்று, யாகசாலை பூஜை தொடங்கியது. இதில், அனுக்ஞை, விக்னேஷ்வர பூஜை, முதற்கால யாகசாலை பூஜை நடந்தது. அறநிலையத்துறை அமைச்சர் ராமசந்திரன் துவக்கி வைத்தார். யாக சாலை பூஜையில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு, சுவாமி தரிசனம் செய்து வழிபட்டனர்.