அருணகிரிநாதர் ஜெயந்தி விழா: முருக பக்தர்கள் ஊர்வலம்
ADDED :2686 days ago
பனமரத்துப்பட்டி: பனமரத்துப்பட்டி, திருமுருகன் திருப்புகழ் சபா, 43வது ஆண்டு விழாவை முன்னிட்டு, ரெட்டியார் தெருவிலுள்ள நாகாயம்மன் கோவிலில் நேற்று, சிறப்பு பூஜை நடந்தது. அங்கிருந்து, சபா தலைவர் மோகன் தலைமையில், பூக்களால் அலங்கரிக்கப்பட்ட அருணகிரிநாதர் படத்தை கையில் ஏந்தியபடி, பக்தர்கள் ஊர்வலமாக புறப்பட்டனர். முருகன் பாடல்களை பாடியபடி, திருவள்ளுவர் சாலை, மாரியம்மன் கோவில் வழியாக பழனி ஆண்டவர் கோவிலுக்கு சென்றனர். அங்குள்ள, முருகனுக்கு அபி?ஷகம் மற்றும் பூஜை செய்தனர். அதன் பின், நாகாயம்மன் கோவிலுக்கு சென்று வழிபாடு நடத்தினர். பக்தர்களுக்கு, பக்தி பாராயண நூல்கள் வழங்கப்பட்டன. திருமுருகன் திருப்புகழ் சபாவை சேர்ந்த சங்கர், நாராயணன், பஞ்சநாதன், செல்வி உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.