மாரியம்மன், காளியம்மன் கோவில்களில் கும்பாபிஷேகம்
ADDED :2686 days ago
வீரபாண்டி: விநாயகர், மாரியம்மன் மற்றும் காளியம்மன் கோவில்களின் கும்பாபி?ஷக விழா இன்று நடப்பதை முன்னிட்டு, நேற்று நடந்த தீர்த்தக்குட ஊர்வலத்தில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். வீரபாண்டி, அக்கரபாளையம் ஊராட்சிக்குட்பட்ட, அக்கரகாடு கிராமத்தில் உள்ள விநாயகர், மாரியம்மன் மற்றும் காளியம்மன் கோவில்களின் கும்பாபி ?ஷக விழா கடந்த, 17ல் காளியம்மன் பாலாலயத்துடன் துவங்கியது. நேற்று மாலை, 5:00 மணிக்கு நடந்த முளைப்பாரி, தீர்த்தக்குட ஊர்வலம் கிராமத்தின் முக்கிய வீதிகள் வழியாக சென்று, விநாயகர் கோவிலை அடைந்தது. நேற்று விநாயகர், லட்சுமி கணபதி, வித்யா சரஸ்வதி மற்றும் பராசக்தி யாகங்கள் நடந்தன. இன்று காலை, 6:00 மணி முதல் 6:30 மணிக்குள் விநாயகர் கோவில், 6:30 மணி முதல் 7:00 மணிக்குள் காளியம்மன் கோவில் கும்பாபி?ஷகம் நடக்கிறது.