சிவசுப்ரமணிய சுவாமி கோவில் குளம் சீரமைப்பு பணிகள் துவக்கம்
                              ADDED :2685 days ago 
                            
                          
                          கலசப்பாக்கம்: திருவண்ணாமலை மாவட்டம், கலசப்பாக்கம் அடுத்த, மோட்டூர் நட்சத்திர கோவில் பகுதியில், சிவசுப்ரமணிய சுவாமி கோவில் உள்ளது. இக்கோவிலில், சந்திரபுஷ்கரணி சுனை மற்றும் தீர்த்தக்குளம் உள்ளது. கடந்த, 50 ஆண்டுகளுக்கும் மேலாக, பராமரிப்பின்றி, தூர்வாராமல் இருந்தது. தூர்வாரி, படிக்கட்டுகள் அமைத்தல், சுற்றுச்சுவர் அமைத்தல் உள்ளிட்ட பணிகளை செய்ய பக்தர்கள் கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து, கடந்த சட்டமன்ற தொடரில், 110 விதியின் கீழ், தீர்த்தக்குளம் சீரமைக்க அறிவிப்பு வெளியானது. இதையடுத்து, சந்திரபுஷ்கரணி சுனை மற்றும் தீர்த்த குளம் ஆகிய குளங்களை சீரமைக்க, 10 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, கடந்த, இரண்டு நாட்களாக பணி நடக்கிறது.