உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பிரம்மாகுமாரிகள் சிறப்பு தியானம்

பிரம்மாகுமாரிகள் சிறப்பு தியானம்

விழுப்புரம்: பிரம்மாகுமாரிகள் ராஜயோக தியான நிலையத்தில், உலக நன்மைக்காக சிறப்பு தியானம் நடந்தது. வளவனுாரில் உள்ள பிரஜா பிதா பிரம்மாகுமாரிகள் ஈஸ்வரிய விஷ்வ வித்தியாலயம் ராஜயோக தியான நிலையத்தில், மாதேஸ்வரி ஜகதம்பா சரஸ்வதி நினைவு நாளை முன்னிட்டு, உலக நன்மைக்காக சிறப்பு தியானம் நடந்தது. ராஜயோக தியான நிலைய நிர்வாகி செல்வமுத்துகுமரன் தலைமை தாங்கினார். முருகா மருத்துவமனை நிர்வாகி சுந்தரமூர்த்தி வாழ்த்துரை வழங்கினார். இதில், ஏராளமான பிரம்மாகுமாரர்கள், பிரம்மாகுமாரிகள் கலந்து கொண்டு தியானம் செய்தனர்.





தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !