கோவை சிவன் கோவில்களில் பிரதோஷ வழிபாடு
ADDED :2692 days ago
கோவை,:கோவை நகர் மற்றும் புறநகரில் உள்ள சிவன் கோவில்களில், பிரதோஷம் முன்னிட்டு நேற்று சுவாமிக்கு சிறப்பு பூஜை நடந்தது. கோவை கோட்டைமேட்டில் உள்ள சங்கமேஸ்வரர் கோவிலில், நேற்று மாலை, 4:30 மணிக்கு, சுவாமிக்கு, பால், தயிர், இளநீர், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட திரவியங்களில், அபிஷேகம் நடந்தது. இதேபோல், பேரூர் பட்டீஸ்வரர் கோவில், வெள்ளலுார் தேனீஸ்வரர் கோவில், சித்தலிங்கேஸ்வரர் கோவில், பொள்ளாச்சி ரோடு, ஒத்தக்கால் மண்டபத்தில் உள்ள புற்றிடங்கொண்டீஸ்வரர் கோவில், பாலக்காடு ரோடு, மதுக்கரையில் உள்ள தர்மலிங்கேஸ்வரர் கோவில்களில், நேற்று மாலை சிறப்பு வழிபாடு நடந்தது.