உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பரியாமருதிப்பட்டி சேவுகப்பெருமாள் கோயிலில் தேரோட்டம்

பரியாமருதிப்பட்டி சேவுகப்பெருமாள் கோயிலில் தேரோட்டம்

திருப்புத்துார்: திருப்புத்துார் ஒன்றியம் பரியாமருதிப்பட்டி சேவுகப்பெருமாள் கோயிலில் ஆனித் தேரோட்டம் நடந்தது.சிவகங்கை சமஸ்தானத்தைச் சேர்ந்தது பரியமருதுபட்டி பூரண புஷ்கலா சமேத சேவுகப்பெருமாள் கோயில். இக்கோயிலில் ஆனி உற்சவ விழா ஜூன் 18 ல் காப்புக்கட்டி துவங்கியது. தினசரி இரவில் சுவாமி திருவீதி உலா நடந்தது.ஜூன்23ல் திருக்கல்யாணம் நடந்தது.நேற்று அதிகாலை 5:00 மணிக்கு சுவாமி தேரில் எழுந்தருளினர். மாலை 3:00 மணிக்கு தேர் வடம் பிடித்து தேரோட்டம் நடந்தது. பக்தர்கள் தங்களின் நேர்த்திக்கடனை நிவர்த்தி செய்யும் வகையில் தேரோடும் வீதியில் மாங்கனிகளை சூரை விட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !