காரைக்கால் மாங்கனி விழாவில் இறைவனுக்கு அமுது படையல்
ADDED :2700 days ago
காரைக்கால்: காரைக்கால் அம்மையார் கோவிலில் நேற்று மாங்கனி திருவிழா நடந்தது. சிவபெருமான் அடியார் வேடத்தில் காவி உடை, ருத்ராட்சம் தரித்து பிச்சாண்டவர் கோலத்தில் வீதி உலா வந்தார். வீதி உலா வரும் பிச்சாண்டவரை காரைக்கால் அம்மையார் எதிர்சென்று அழைத்து, அமுது படைக்கும் வைபவம், இரவு 8.30 மணிக்கு அம்மையார் கோவிலில் நடைபெற்றது. இதில், இனிப்பு, பழங்கள் என பல்வேறு உணவுடன், இறைவனுக்கு அமுது படைக்கப் பட்டது. இரவு புனிதவதியார் புஷ்ப பல்லக்கில் பாண்டிய நாடாகிய சித்தி விநாயகர் ஆலயத்திற்கு செல்லும் நிகழ்ச்சி நடந்தது.