உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கிருஷ்ணராயபுரம் மாரியம்மன் கோவில் திருவிழா: மஞ்சள் நீராடல்

கிருஷ்ணராயபுரம் மாரியம்மன் கோவில் திருவிழா: மஞ்சள் நீராடல்

கிருஷ்ணராயபுரம்: கிருஷ்ணராயபுரம் மாரியம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு, நேற்று காலை மஞ்சள் நீராடல் நிகழ்ச்சி நடந்தது. கிருஷ்ணராயபுரம் நெடுஞ்சாலையில் அமைந்துள்ள மாரியம்மன் கோவில் திருவிழா கடந்த இரண்டு நாட்களாக நடந்தது. இதில், தீர்த்தக்குட ஊர்வலம், அலகு குத்தி ஊர்வலம், மாவிளக்கு எடுத்தல் உட்பட பல்வேறு நிகழ்சிகள் நடந்தன. நேற்று காலை, திருவிழா நிறைவு நாள் நிகழ்ச்சியாக, அம்மன் திருவீதி உலா மற்றும் மஞ்சள் நீராடல் நடந்தது. மாலையில், கம்பம் ஆற்றுக்கு கொண்டு செல்லும் நிகழ்ச்சி நடந்தது. இதில், ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !