முத்துமாரியம்மன் கோயில் முளைப்பாரி ஊர்வலம்
ADDED :2977 days ago
ஆர்.எஸ்.மங்கலம், ஆர்.எஸ்.மங்கலம் கீழத்தெரு முத்துமாரியம்மன் கோயில் முளைப்பாரி விழா கடந்த 19ல் காப்பு கட்டுதலுடன் துவங்கியது. தினமும் இரவில் பெண்களின் கும்மியாட்டமும், இளைஞர்களின் ஒயிலாட்டமும் நடைபெற்று வந்தன. விழாவின் கடைசி நாளான நேற்று வீடுகளில் வளர்க்கப்பட்டு வந்த முளைப்பாரிகளை பக்தர்கள் கோயிலில் வைத்து வழிபாடு செய்து, முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக எடுத்துசென்று குளத்து நீரில் கரைத்தனர்.