வத்திராயிருப்பு முத்தாலம்மன் கோயில் தேரில் தீ: சிற்பங்கள் சேதம்
ADDED :2701 days ago
வத்திராயிருப்பு: வத்திராயிருப்பு முத்தாலம்மன் கோயில் தேரில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் சிற்பங்கள் சேதமானது. இக்கோயிலுக்கு சொந்தமான தேர் கோயில் அருகே நிறுத்தப்பட்டுள்ளது. பாதுகாப்பிற்காக தகரெஷட் போடப்பட்டு கதவுகள் அமைக்கப்பட்டுள்ளன. சுற்றிலும் கடைகள் உள்ளன. ெஷட்டின் அடிப்பகுதி இடைவெளி வழியாக பிளாஸ்டிக் கழிவுகள், குப்பை காற்றில் அடித்துச் செல்லப்பட்டு தேங்கியுள்ளன. இதன் அருகில் வீசப்பட்ட பீடி, சிகரெட் நெருப்பு உள்ளே சென்று பற்றியதில் நேற்று மாலை 5:30 மணிக்கு தேரிலும், தேரை சுற்றிய வடத்திலும் தீ பரவியது. ெஷட்டிலிருந்து கரும்புகை வெளியறியது. தீயணைப்பு துறையினர் தண்ணீரை பீய்ச்சி தீயை அணைத்தனர். இதில் வடம் முற்றிலும் எரிந்தது. தேரின் அரிய சிற்பங்களும் சேதமாகின. வத்திராயிருப்பு போலீசார் விசாரிக்கின்றனர்.