முச்சந்தியம்மனுக்கு ஜூலை 1ல் கும்பாபிஷேகம்
வில்லிவலம்: வில்லிவலம் முச்சந்தியம்மன் கோவில் கும்பாபிஷேகம், ஜூலை, 1ல் நடைபெற உள்ளது. வாலாஜாபாத் பாலாற்றங்கரை ஓரம், வில்லிவலம் கிராமம் உள்ளது. இங்கு, முச்சந்தி அம்மன் ராஜ கோபுரம் மற்றும் வரதராஜப்பெருமாள் கோவில் புதிதாக கட்டப்பட்டுள்ளன.
கோவில் மூலவர்களுக்கு ஜூலை, 1ல் கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. இதை முன்னிட்டு, நேற்று காலை, 8:30 மணிக்கு கணபதி ஹோமத்துடன் பூஜைகள் துவங்கின. இன்று காலை, நவக்கிரக ஹோமம், மாலை முதல், கால பூஜை நடக்க உள்ளது. நாளை காலை, இரண்டாம் கால பூஜையும், மாலை மூன்றாம் கால பூஜையும் நடைபெற உள்ளது. வரும், 1ம் தேதி காலை, 7:30 – 8:30 மணிக்குள் வரதராஜப்பெருமாள் கோவிலுக்கும், காலை, 9:30 மணிக்கு முச்சந்தியம்மன் கோவில், ராஜகோபுரம் மற்றும் விமானத்திற்கு கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. விழாவிற்கான ஏற்பாடுகளை, வில்லிவலம் ஊராட்சி முன்னாள் தலைவர், திலகவதி இளைய ராஜா மற்றும் கிராம மக்கள் செய்துள்ளனர்.