உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / புத்துமாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம்

புத்துமாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம்

கிள்ளை: பரங்கிப்பேட்டை அடுத்த பள்ளிப்படை கோல்டன் நகரில் புதிதாக கட்டப்பட்ட புத்துமாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம் நடந்தது. கும்பாபிஷேகத்தையொட்டி, கடந்த 27ம் தேதி காலை 6:30 மணிக்கு கணபதி ேஹாமம் மற்றும் யாகசாலை பிரவேசம், முதல்கால யாகசாலை பூஜை நடந்தது. 28ம் தேதி காலை இரண்டாம் கால யாகசாலை பூஜை நடந்து கடம் புறப்பாடாகி, கும்பாபிஷேகம் நடந்தது. விழாவில், தொழிலதிபர் பாலு அம்சமணி, சி.கொத்தங்குடி முன்னாள் ஊராட்சித் தலைவர் கண்ணன் வேணுகோபால், அம்சா, தில்லைவிடங்கன் வெற்றி புத்தக நிலைய உரிமையாளர் தியாகராஜன் மற்றும் கிராம மக்கள் பங்கேற்றனர். விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகி ஈஸ்வரி, கார்த்திக் உள்ளிட்ட விழாக்குழுவினர் செய்திருந்தனர். கீற்றுக் கொட்டகையில் இருந்த இக்கோவிலுக்கு அப்பகுதியைச் சேர்ந்த தொழிலதிபர் நெல்லுமண்டி பாலு குடும்பத்தினர் கான்கிரீட் கட்டடத்தில் கோவில் கட்டி, மூலவர் மற்றும் துணை விக்ரகங்களை காணிக்கையாக வழங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !