கோடீஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம்: கணபதி ஹோமத்துடன் துவக்கம்
ADDED :2701 days ago
கரூர்: கோடீஸ்வரர் கோவில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு, நேற்று ஆறு கால பூஜைகள் கணபதி ஹோமத்துடன் துவங்கின. கரூர், அமராவதி ஆற்றங்கரையோரம், ஐந்து ரோட்டிலுள்ள கோடீஸ்வரன் கோவில் கும்பாபி?ஷகம் ஜூலை, 2ல், நடக்கவுள்ளது. விழாவை முன்னிட்டு, நேற்று காலை கணபதி ?ஹாமம், விக்னேஸ்வர் பூஜை செய்து துவங்கப்பட்டது. நாளை, இரண்டாம் கால பூஜை, மூன்றாம் கால பூஜை நடக்கிறது. அதேபோல் ஜூலை, 1ல் காலை, 9:00 மணியளவில் நான்காம் கால பூஜை, மாலை ஐந்தாம் கால பூஜை, 2ல், ஆறாம்கால பூஜை நடக்கிறது. அன்று காலை, 9:30 மணிக்கு மேல், 10:30 மணிக்குள் ராஜகோபுரம், மூலவர் விமானத்திற்கு புனித நீரை ஊர்வலமாக எடுத்து வந்து, கும்பாபி?ஷகம் நடக்கவுள்ளது. ஏற்பாடுகளை உதவி ஆணையர் சூரியநாராயணன், ஆய்வாளர் ராதாகிருஷ்ணன், செயல் அலுவலர் ராசாராம் ஆகியோர் செய்து வருகின்றனர்.