பக்த ஆஞ்சநேயர் கோயிலில் மூலநட்சத்திர பூஜை
ADDED :2701 days ago
சின்னாளபட்டி, மேலக்கோட்டை பக்த ஆஞ்சநேயர் கோயிலில், மூல நட்சத்திர பூஜை நடந்தது. பல்வேறு திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் நடந்தது. வெற்றிலை, துளசி அலங்காரத்துடன், மகா தீபாராதனை நடந்தது. * கசவனம்பட்டி மவுனகுரு சுவாமி கோயிலில், மூலவர், உற்சவர், நந்திக்கு 30 வகை அபிஷேகம் நடந்தது. உற்சவருக்கு ராஜ அலங்காரம் செய்யப்பட்டு, தேவார, திருவாசக பாராயணத்துடன் தீபாராதனை நடந்தது. ஆன்மிக சொற்பொழிவு, அன்னதானம் நடந்தது.