பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோவிலில் சிறப்பு திருமஞ்சனம்
ADDED :2773 days ago
நெட்டப்பாக்கம்: வடுக்குப்பம் பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோவிலில், சிறப்பு திருமஞ்சனம் வரும் 1ம் தேதி காலை 10 மணிக்கு நடக்கிறது. நெட்டப்பாக்கம் அடுத்த வடுக்குப்பம் கிராமத்தில் பத்மாவதி தாயார் சமேத பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோவில் உள்ளது. இந்த கோவிலில் வரும் 1ம் தேதி திருவோன நட்சத்திரத்தை முன்னிட்டு, காலை 10 மணிக்கு சிறப்பு திருமஞ்சனம் நடக்கிறது. தொடர்ந்து பகல் 12 மணிக்கு மூலவர் திருமலை திருவேங்கடமுடையான் சேவையில் சிறப்பு தீபாராதனை நடக்கிறது.