உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / செல்லாண்டியம்மன் கோவில் வரும் 4ல் தேர்த்திருவிழா

செல்லாண்டியம்மன் கோவில் வரும் 4ல் தேர்த்திருவிழா

மோகனூர்: வாழவந்தி, செல்லாண்டியம்மன் கோவில் தேர்த்திருவிழா, ஜூலை, 4ல் நடக்கிறது. மோகனூர் அடுத்த, எஸ்.வாழவந்தியில் பிரசித்தி பெற்ற செல்லாண்டியம்மன் கோவில் உள்ளது. இக்கோவில், எஸ்.வாழவந்தி, சின்னகரசப்பாளையம், பெரியகரசப்பாளையம், கே.ராசாம்பாளையம், காளிபாளையம், பெரமாண்டம்பாளையம் உட்பட, 18 கிராமங்களுக்கு பாத்தியப்பட்டது. கடந்த, நான்கு ஆண்டுகளாக, பல்வேறு காரணங்களால், தேர்த்திருவிழா தடைபட்டது. பல்வேறு கட்ட பேச்சுவார்த்தையில் சமரசம் ஏற்பட்டதையடுத்து, திருவிழா கொண்டாட முடிவு செய்யப்பட்டது. அதன்படி, கடந்த, 28ல் சிறப்பு யாகம் நடத்தி, அம்மனுக்கு காப்புக்கட்டி திருவிழா துவங்கியது. வரும், 4 காலை, 9:00 மணிக்கு, சுவாமி ரதம் ஏறுதல், தொடர்ந்து, மாவிளக்கு பூஜை, எல்லை உடைத்து, ஊமைப்புலி குத்தும் நிகழ்ச்சி நடக்கிறது. ஏற்பாடுகளை, கோவில் நிர்வாகிகள், ஊர் மக்கள் செய்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !