ஆலஞ்சேரி அவ்வையார் கோவிலில் கூழ்வார்த்தல் விமரிசை
ADDED :2661 days ago
உத்திரமேரூர்: ஆலஞ்சேரி அவ்வையார் கோவிலில், கூழ்வார்த்தல் விழா நேற்று நடந்தது. உத்திரமேரூர் அடுத்த, ஆலஞ்சேரி கிராமத்தில், அவ்வையாருக்கு கோவில் உள்ளது. இக்கோவிலில், பல ஆண்டுகளாக, ஆண்டுதோறும் சித்திரை, வைகாசி மாதங்களில் கூழ்வார்த்தல் விழா நடத்தப்படுகிறது. அதன்படி, இந்த ஆண்டு விழா, ஜூன், 29ம் தேதி, கொடியேற்றத்துடன் துவங்கியது. நேற்று காலை, 12:00 மணிக்கு, மலரால் அலங்கரிக்கப்பட்ட அவ்வையார், முக்கிய வீதிகளில் வலம் வந்தார். ஒவ்வொரு குடும்பத்தினரும், தீபம் ஏற்றி வழிபட்டனர். மாலை, 3.00 மணிக்கு, அவ்வையார் கோவிலில் கூழ்வார்த்தல் விழா நடந்தது. ஆலஞ்சேரி மற்றும் அப்பகுதியை சுற்றியுள்ள நுாற்றுக்கணக்கானோர் பங்கேற்று, அவ்வையை தரிசித்தனர்.