திருக்கோவிலூர் உலகளந்த பெருமாள் கோவில் கும்பாபிஷேகம் வரும் 11ம் தேதி நடக்கிறது
திருக்கோவிலுார்: உலகளந்த பெருமாள் கோவில் பெரிய ராஜகோபுரம் வரும் 11ம் தேதி கும்பாபிஷேகம் நடக்கிறது. திருக்கோவிலுார் உலகளந்த பெருமாள் கோவில் கிழக்கு பெரிய ராஜகோபுரம்‚ ஆஞ்சநேயர் சன்னதிகள் வரும் 11ம் தேதி கும்பாபிஷேகம் நடக்கிறது. மேலும்கோவில் வளாகத்தில் உள்ள லஷ்மி நாராயணன்‚ லஷ்மி வராகன்‚ லஷ்மி நரசிம்மர்‚ ஆண்டாள் நாச்சியார்‚ சேனை முதலிகள்‚ வீர ஆஞ்சநேயர் சன்னதிகள்புதுப்பிக்கப்பட்டு அன்ைறய தினமே கும்பாபிேஷகம் நடக்கிறது.இதனையடுத்து வரும் 7ம் தேதி வேத‚ திவ்ய பிரபந்தாதிகள் தொடங்கி யாகசாலை பூஜைகள் நடக்கிறது. நிகழ்ச்சியின் முக்கிய தினமான 11ம் தேதி அதிகாலை 5:00மணிக்கு‚ புண்யாகவாசனம்‚ விஸ்வரூபம்‚ அக்னி ஆராதனம்‚ கும்ப ஆராதனம்‚ ததுத்த ஹாமங்கள்‚ மகா பூர்ணாஹூதி முடிந்து கடம் புறப்பாடாகி காலை 9:00 மணியில் இருந்து 9:30 மணிக்குள் கிழக்கு ராஜகோபுரம் மற்றும் ஆஞ்சநேயர் சன்னதி கும்பாபிேஷகம் நடக்கிறது. தொடர்ந்து 9:30 மணிக்கு துவங்கி 10:30 மணிக்குள் லஷ்மிநாராயணன் உள்ளிட்ட சன்னதிகளுக்கு கும்பாபிேஷகம் நடக்கிறது. ஜீயர் ஸ்ரீநிவாச ராமானுஜாச்சாரிய சுவாமிகள் தலைமையில் நடைபெறும் கும்பாபிேஷக ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர்கள் செய்து வருகின்றனர்.