செல்வ விநாயகர் கோவில் கும்பாபிஷேகம்
ADDED :2704 days ago
தர்மபுரி: தர்மபுரி அடுத்த, எருமதானம்பட்டி, அண்டைகான்கொட்டாய் செல்வ விநாயகர் கோவில் கும்பாபி?ஷகம், நேற்று நடந்தது. இதையொட்டி, நேற்று முன்தினம் காலை, 8:00 மணிக்கு, கங்கனம் கட்டப்பட்டது. இரவு, 9:00 மணிக்கு, யாக சாலை பிரவேசனம் நடந்தது. நேற்று காலை, 7:00 மணிக்கு, இரண்டாம் கால யாக சாலை பூஜைகள் மற்றும் ?ஹாமம், ப்ரான பிரதிஷ்டை நடந்தது. அதை தொடர்ந்து, கும்பாபிஷேகம் நடந்தது. இதில், ராமசந்திர பட்டச்சாரியார், கோபால், வெங்கடேசன் பூசாரிகள் கோபுர கலசம் மற்றும் செல்வ விநாயகருக்கு புனித நீர் ஊற்றி கும்பாபி?ஷகம் செய்து வைத்தனர்.